தமிழகம்

2016 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பலமான சக்தியாக திகழும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த சக்தியாகத் திகழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரி வித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப் பாளருமான முகுல் வாஸ்னிக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர், முகுல்வாஸ்னிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சோனியா காந்தி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கட்சியின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கருத்துகள் கேட்கப்படுகின்றன. இக்கருத்துகள் மற்றும் கட்சியை பலப்படுத்த மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் குறித்து வரும் 28-ம் தேதி சோனியாவிடம் அறிக்கை அளிக்கப்படும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு மீது மாணவர்கள், இளைஞர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு மோடி அரசின் தவறான செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும். மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர் வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: கட்சியை பலப் படுத்துவது தொடர்பாக தொண்டர் களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதுவரை 4 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இளைஞர்கள், பொது மக்கள் அவர்களாகவே முன் வந்து காங்கிரஸ் கட்சியில் உறுப் பினர்களாக சேர்கின்றனர்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த சக்தியாகத் திகழும். சட்டப் பேரவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப் படுவது புதிதல்ல. 1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சியில் சட்டப் பேரவையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT