போக்குவரத்து வாகன உரிமை யாளர்களின் வசதிக்காக காலாண்டு வரி வசூல் சிறப்பு முகாம் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று நடக்கிறது.
இதுபற்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாநகர் கிளை மேலாளர் ரவிகுமார் நேற்று வெளி யிட்ட செய்தியில் கூறியிருப்பதா வது: போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் வசதிக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், தமிழக அரசு போக்குவரத்து துறையும் இணைந்து போக்குவரத்து வாகன வரி வசூல் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன. வாகன உரிமையாளர்கள் தங்களுடைய காலாண்டு வாகன வரியை அண்ணா நகர், சிந்தாமணி பகுதியில் எண் 1/28, முதல் அவென்யூவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.