தமிழகம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

மத்திய நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மத்திய திட்டக் குழுவை கலைப்பது குறித்த மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசினார். அதேபோல் தற்போது திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

இந்தக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார்.

SCROLL FOR NEXT