அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பித்துரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதி மன்ற கிளையில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் பஸ் நிலையத்தில் 31.8.2014ல் போக்குவரத்துக்கு இடையூறாக நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பித்துரை, மாநில போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர்.
இது தொடர்பாக டவுன் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித் தேன். ஆனால், நடவடிக்கை எடுக்க வில்லை. மீண்டும் அதே இடத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து இருவரும் போர்டு வைத்தனர். இதுகுறித்தும் புகார் அளித்தேன். போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தர விட வேண்டும் எனக் கூறப்பட்டி ருந்தது. இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அடுத்த விசாரணையை பிப். 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.