குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ”குரு ரவிதாஸ் பிறந்ததினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குரு ரவிதாஸ் உலகம் முழுதும் பரப்பிய உலகளாவிய சகோதரத்துவம் தொடர்பான உன்னத போதனைகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும்வகையில் உள்ளது. சமுதாயத்தில் சமத்துவத்தை உருவாக்குவதற்கு குரு ரவிதாஸ் கண்ட போராட்டங்களில் இருந்து நாம் ஊக்கம் பெறுவோம். சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க குரு ரவிதாஸ் அயராது போராடினார். அந்த போராட்டத்திற்கு நாமும் நம்மை அற்பணிப்போம்" எனக் கூறியுள்ளார்.