தமிழகம்

ஆர்.சி.சக்தி உடலுக்கு கமல், சாருஹாசன் அஞ்சலி

செய்திப்பிரிவு

மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தியின் உடல் போரூர் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

‘சிறை’, ‘வரம்’, ‘தர்மயுத்தம்’, ‘உண்மைகள்’ உட்பட பல திரைப்படங் களை இயக்கியவர் பிரபல இயக்குநர் ஆர்.சி.சக்தி. கமல்ஹாசனை ‘உணர்ச்சி கள்’ படத்தின் வழியே நாயகனாக அறிமுகப்படுத்தியவர். நோய்த் தொற்று காரணமாக சென்னை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்த ஆர்.சி.சக்தி (76) நேற்று முன்தினம் காலமானார்.

சென்னை விருகம்பாக்கம் சாய் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள், திரைத் துறையினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. கமல்ஹாசன், சாருஹாசன், கவிஞர் புலமைப்பித்தன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் போரூர் மேட்டுக்குப்பம் மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT