தமிழகம்

சென்னையில் 50 வழித்தடங்களின் பேருந்து எண்கள் மாற்றம்: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஒரு வழித்தடத்தில் ஒரே எண் கொண்ட மாநகர பேருந்து களை இயக்கும் திட்டத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் படிப்படியாக அமல்படுத்த வுள்ளது. இதன் முதல்கட்டமாக 50 பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள் ளன.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “பேருந்துகளின் வழித்தடங்களை மக்கள் எளிமையாக புரிந்து கொண்டு பயணம் செய்யும் வகையில் வழிதடங்களில் வகைப்படுத்துதல் (பிராண்டிங் தி ரூட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளோம். பெங்களூர், மும்பை ஆகிய மாநகரங்களில் இது நடைமுறை ஏற்கெனவே உள்ளது. இதன் முதல்கட்டமாக 50 வழித் தடங்களில் பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. எஞ்சியுள்ள பேருந்துகளின் எண் களும் படிப்படியாக மாற்றியமைக்கப்படும். பேருந்துகளின் எண்களை மாற்றியமைக்கும்போது சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் மூலம் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

தடம் எண் மாற்றப்பட்டுள்ள பேருந்துகள் (அடைப்பு குறியில் பழைய எண் உள்ளது):

26 (17எம்), 26கட் (17எம் கட்), 26விரிவு (17எம் விரிவு), 51 (எம்21), 51கட் (எம் 21 கட்), 53ஏ (153), 53பி (553), 64கே (7ஜி), 64கே விரிவு (7ஜி விரிவு), 70சி (எம்70சி), டி70கட் (எம்70வி), 77 (எம்70ஏ), 77ஏ (20ஜெ), 77 கட் (எம்70ஏகட்), 77டி (62டி), 77இ (61கே விரிவு), 77ஜெ (ஜெ70), 77கே (20எச்), 77கே (எம்70எல்), 77எம் (62இ), 77பி (61பிகட்), 77வி (எம்70இ), 77வி விரிவு (70இ), 91 (ஏ21), 91 ஏசி (ஏ21ஏசி), 91ஜி (வி21), 91வி (ஏ21வி), 95 (டி51), 97கட் (சி51கட்), 97(சி51), 102 (21எச்), 102சி (எச்21), 102கே (டி21), 102எம் (சி21), 109 (பிபி19 விரிவு), 109கட் (பி19கட்), 109சி (170), 111 (170), 113 (சி70), 113 விரிவு (சி70 விரிவு), 120ஏ (61பி), 120இ (61இ), 120கே (61டி), 120கே விரிவு (61 டி விரிவு) 153 (எம்153), 153ஏ (596), 153பி (596ஏ), 153கே (53கே), 153பி (591ஏ), 153டி (596பி).

SCROLL FOR NEXT