நடிகை குஷ்பு, ருத்ராட்ச மாலையை தாலிக் கொடியாக அணிந்த நிலையில் ஒரு வார இதழில் புகைப்படம் வெளியா னது. அதைப் பார்த்த கும்ப கோணத்தைச் சேர்ந்தவரும் இந்து முன்னணி தஞ்சாவூர் மாவட்டச் செயலருமான பாலா (36), கும்பகோணம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘நடிகை குஷ்பு இந்து சமய மரபுகளையும், இந்து கடவுள்களையும் அவமதிக்கும் வகையில் ருத்ராட்ச மாலையில் தாலியைக் கோர்த்து அணிந்துள் ளார். இதேபோல அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவரைத் தண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நேற்று, இந்த மனு விசார ணைக்கு வந்தது. உரிய முகாந்திரம் இல்லாத காரணத் தால் வழக்கை தள்ளுபடி செய்வதாக, நீதிபதி சரவணபவன் உத்தரவிட்டார்.