சென்னை கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ வெள் ளிப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோட்டூர்புரம் காந்தி மண்ட பம் சாலையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். காரின் உள்பகுதியில் 70 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் இம்தியாஸ் மற்றும் பிரமோஷ் ஆகியோ ரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வெள்ளிப் பொருட்களை விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.
முறையான ஆவணங்கள் இல்லாததால், அவர்களிடம் இருந்து வெள்ளிப் பொருட் களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.