உரத் தொழிற்சாலைகள் தொடர்ந்து சிறப்பான உற்பத்தியில் ஈடுபட நாப்தாவை மானிய விலை யில் வழங்க வேண்டும். இதற் கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளி யாக வேண்டும் என உரத் தொழிற் சாலை சங்க நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பொது பட்ஜெட்டில் விவ சாயத்துக்கு தேவையான உர உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கள் மற்றும் அத்துறையில் மேற் கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அரசு அளிக்கும் உரத்திற்கான மானியத்தால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. எனவே, விவசாயி களுக்கான மானியத்தை அதிகப் படுத்த வேண்டும். மேலும், விவ சாயத் துறையில் அரசு துறையின் முதலீடு அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உரங்கள் உற்பத்திக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உரத் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் எரி வாயுக்கான மானியத்தைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
கோதாவரி ஆற்றுப்படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தமிழ கத்திற்கு வழங்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரி வாயுவுக்கு மானியம் அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயிகள். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு போதிய அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்று ரங்கராஜன் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து, சென்னை உரத் தொழிற்சாலை (எம்.எப்.எல்.), ஸ்பிக், மங்களூர் ரசாயன உரத் தொழிற்சாலை (எம்சிஎப்எல்) தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஆலோசகர் கே.ஜெய்சங்கர் கூறியதாவது:
சென்னை உரத் தொழிற் சாலையில் நாப்தா மூலப் பொருட் களைக் கொண்டு உரத் தயாரிப் பதற்கு தடை விதித்ததையடுத்து, மூன்று மாதங்கள் உற்பத்தி பாதிக் கப்பட்டது. தற்போது எரி வாயுவை பயன்படுத்தி 100 நாட்களுக்கு உரம் தயாரிக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது சென்னை உரத் தொழிற்சாலையில் ஆண் டொன்றுக்கு 5 லட்சம் டன் யூரி யாவும், ஸ்பிக் மற்றும் மங்க ளூர் உரத் தொழிற்சாலை கள் தலா 6 லட்சம் வீதம் மொத் தம் 17 லட்சம் டன் யூரியா தென்னிந்தி யாவில் உற்பத்தி செய்யப்படுகி றது. எனினும், விவசாயத் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து குறிப் பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 ஆயிரம் டன் உரம் போதிய தரத்தில் இல்லை. உரத் தொழிற்சாலைகள் தொடர்ந்து சிறப்பான உற்பத்தியில் ஈடுபட நாப்தாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.