ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திருச்சி வந்துள்ள சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் பணிகள் நியாயமாகத்தான் நடக்கின்றன. இந்த தேர்தலில் அதிமுகவினர் பணம் கொடுப்ப தாகக் கூறுவது அப்பட்டமான பொய். தேர்தல் ஆணையம் செயல் படவில்லை என கூறும் பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யவேண்டும்.
அமைச்சர்கள் தேர்தல் பணிக்காக இங்கு வந்துள்ளதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கின்றன என்பது அடிப்படையற்ற குற்றச் சாட்டு. தமிழக முதல்வர் செயல் படாமலிருக்கிறார் என கனிமொழி கூறுவது தவறானது. முதல்வர் கோட்டைக்குச் சென்று பணிகளை கவனிக்கிறார். திருச்சி வந்து கட்சியினருடன் ஆலோ சனை நடத்துகிறார். டெல்லி சென்று பிரதமர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதைவிட ஒரு முதல்வர் வேறு என்ன செய்ய வேண்டும்?
ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு தமிழகத்துக்கு புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். மீத்தேன் திட்டம் தற்போது தேவையில்லை.
மக்கள் தரிசனம் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்திவருகிறேன். இதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக் கில்லை. ஆனால், என்னை முதல் வராக்கிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் கட்சித் தொண்டர்களுக்கு இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் நீடிக்க வேண்டும் என்ற ஆசை எனது ஆழ்மனதில் உள்ளது.