நட்சத்திர ஓட்டல்களில் வரி வசூல் செய்ய திருநங்கைகளை ஆட வைத்ததற்காக அவர்களிடம் சென்னை மாநகராட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களின் வரி பாக்கியை வசூல் செய்ய திருநங்கைகளை ஆட வைத்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை வசூல் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். மேலும் அதற்குரிய அரசாங்க வழிமுறைகளும், சட்டத் திட்டங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பின்பற்றாமல், திருநங்கைகளை ஆடவிட்டு வரி வசூல் செய்வது ஏற்க முடியாதது. இதனால், திருநங்கைகளின் உணர்வுகள் புண்பட்டுள்ளன. எனவே அவர் களிடம் மாநகராட்சி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.