இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உதவியுடன் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கிளையின் இலவச தாய்சேய் பாதுகாப்பு வாகனத்துக்கான ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் 11-ம் தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் நடைபெறுகிறது.
ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன உரிமத்துடன், பாட்ஜ் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
மேலும் 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 162.5 செ.மீ. உயரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் வர வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு இந்திய செஞ் சிலுவை சங்கத்தின் 044-42147572 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.