தமிழகம்

அதிமுகவினர் கொண்டாட்டம்: ஜெயலலிதாவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி யின் பொதுச் செயலாளர் ஜெயலலி தாவை சந்தித்துப் பேசினார்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங் கியது. தொடக்கத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி, திமுக வேட்பாளர் ஆனந்தை விட அதிக வாக்குகள் பெற்றுவந்தார். ஒவ்வொரு சுற்றும் முடிய முடிய அதிமுக வேட்பாளருக்கும் திமுக வேட்பாளருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் மிகவும் அதிகமானது.

அதிமுக முன்னிலையில் இருந்த தகவலை அறிந்ததும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு முன்பும் அதிமுக தொண்டர்களும் மகளிர் அணியினரும் குவிந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெற்றியை கொண்டா டினர். போயஸ் கார்டனில் நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணமும், மகளிர் அணியின ரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆடினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் எம்எல்ஏக்கள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதற்கிடையே, வாக்கு எண் ணிக்கையின்போது தொடக்கத்தில் இருந்தே அதிமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணியளவில் போயஸ் கார்டனுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார். இடைத்தேர்தல் வெற்றி மற்றும் இன்று தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT