தமிழகம்

டேங்கர் லாரி வாடகை விவகாரம்: பேச்சில் உடன்பாடு

செய்திப்பிரிவு

டேங்கர் லாரிகளின் வாடகைக் கட்டணம் குறித்த பேச்சு வார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டது.

டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சூ.கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லாரி உரிமையாளர்கள் டேங்கர் லாரிகளுக்கான வாடகை யை 1 கி.மீ.க்கு ரூ.3.09 காசுகளாக நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், எண்ணெய் நிறுவ னங்கள் ரூ.2.94 மட்டுமே தர முடியும் என்றன. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. எனினும், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். இைதத்தொடர்ந்து நேற்று எண்ணெய் நிறுவன அதிகாரி களுடன் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் பேச்சு நடத்தினர்.அதில், லாரி வாடகைக் கட்டண மாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.02 உயர்த்தித் தருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. இதை லாரி உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT