தமிழகம்

ஜோலார்பேட்டையில் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸார் மீது தாக்குதல்: டிக்கெட் பரிசோதகர்கள் மீது வழக்கு

செய்திப்பிரிவு

பெங்களூருவில் இருந்து சென்னை சென்டரல் வரை செல் லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.15 மணிக்கு ஜோலார்பேட்டை 3-வது பிளாட்பாரத்துக்கு வந்தது. அப்போது எஸ்-12 என்ற ஏசி பெட்டி யில் ஜோலார்பேட்டை ரயில்வே பெண் காவலர் லட்சுமி, காவலர்கள் மணிவாசகம், ரவிச்சந்திரன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை யைச் சேர்ந்த சாமிநாதன் ஆகிய 4 பேரும் பாதுகாப்பு பணிக்காக ஏற முயன்றனர்.

அப்போது அந்த பெட்டியில், டிக்கெட் பரிசோதகராக இருந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் வாணன் (45) என்பவரும், அதே பெட்டியில் இருந்த மற் றொரு டிக்கெட் பரிசோதகரும் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்ட னர். அப்போது டிக்கெட் பரிசோதகர் தமிழ்வாணன், ரயில்வே பெண் காவலர் லட்சுமியை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. தடுக்க வந்த மணிவாசகம், ரவிச் சந்திரன், சாமிநாதன் ஆகியோரை யும் டிக்கெட் பரிசோதகர்கள் இருவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்கப்பட்டதாக கூறப்படும் 4 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதுகுறித்து பெண் காவலர் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் மீது ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT