தமிழகம்

தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் ஜப்பான் துணைத் தூதர் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுத் துணைத் தூதர் மசனோரி நகனோ நேற்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார். மசனோரியின் தூதர் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, அவர் ஜப்பான் நாட்டிற்கு திரும்பிச் செல்கிறார்.

இதையடுத்து, மரியாதை நிமித்தமாக இச்சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, தனது பதவிக்காலத்தின் போது சென்னையில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் தமிழக மக்கள் அளித்த ஆதரவை நன்றியுடன் மசனோரி நினைவுக் கூர்ந்தார். இச்சந்திப்பின் போது, ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, துணைச் செயலாளர் கே.வி.முரளிதரன் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT