தமிழகம்

கடல்வாழ் உயிரினங்களுக்கு பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு - பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் பேச்சு

செய்திப்பிரிவு

பருவநிலை மாற்றத்தால், கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன என்று, பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக பயன்பாட்டு மண்ணியல் துறை சார்பில், ‘பருவ மாற்றத்தின் தாக்கம் மற்றும் கடலோர மேலாண்மை’ எனும் தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று தொடங்கியது. டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சென்னை பல் கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், ஜப்பான் நாட்டுத் துணைத் தூதர் கயாகோ பருக்கவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பல்கலைக்கழக மண்ணியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.கே.சர்மா அனைவரையும் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் டாக்டர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார்.

நச்சுப் புகையே காரணம்.

பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் பேசியதாவது:

பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத் தரங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற் றம் காரணமாக, கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பால் கடல் நீரில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையே இதற்குக் காரணம்.

கடல் நீரின் வெப்பநிலை 2 டிகிரி அளவுக்கு உயர்ந்துள் ளது. இதனால் கடலில் உள்ள பவளப் பாறைகள் பாதிக்கப் பட்டுள்ளன. அமிலத் தன்மை காரணமாக, கடல்வாழ் உயிரினங் களுக்கு கால்சியம் தன்மை குறைந்து தோல் வியாதிகள் ஏற்படுகின்றன.நாட்டில் தொழில் வளர்ச்சி அவசியம்தான். ஆனால், விவ சாயத்தை ஒழித்துவிட்டு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது.

பருவ மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து கல்லூரிகளிலும் சுற்றுச்சூழல் அறிவியல் கல்வியை ஒரு பாடத் திட்டமாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பேராசிரியர் தேவராஜ் கூறினார்.

களப் பயிற்சி

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளிகளில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டி யில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்தக் ருத்தரங்கின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலி பஞ்சாயத்தில், பேரிடர் ஆபத்துகளை குறைப்பது குறித்து 2 நாள் களப் பயிற்சி நாளை முதல் நடை பெறவுள்ளது.

SCROLL FOR NEXT