தமிழகம்

பன்றிக் காய்ச்சல் பற்றி பேச அனுமதி மறுப்பு: மன்றக் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு

செய்திப்பிரிவு

பன்றிக் காய்ச்சல் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்றக் கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் நேற்று காலை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.கூட்டம் தொடங்கியவுடன் சென்னையில் பன்றிக் காய்ச்சல் நிலவரம் குறித்தும் மாநகராட்சி எடுத்து வரும் தடுப்பு நடவடிக் கைகள் குறித்தும் மேயர் சைதை துரைசாமி பேசினார். அவர் பேசி முடிக்கும்போது, திமுக உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ் எழுந்து மேயர் கூறிய தகவல்கள் தவறானவை என்று கூறினார்.

அவர் பேசுவதற்கு அனுமதி யளிக்காத மேயர், வேறொரு மாமன்ற உறுப்பினரை கேள்வி கேட்க அனுமதித்தார். மன்றத்தில் தொடர்ந்து பேச அனுமதியளிக்கு மாறு போஸ் குரல் எழுப்பினார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து சுபாஷ் சந்திர போஸ், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய சுபாஷ் சந்திர போஸ், “மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் குறித்து போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படு வதில்லை. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவ தில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து மன்றத்தில் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை” என்றார்.

சிறிது நேரம் கழித்து திமுக உறுப்பினர்கள் மீண்டும் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT