இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்கக் கோரி தனியார் டயர் தொழிற் சாலையை கிராம மக்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள் ளது. இந்த தொழிற்சாலை அமைப் பதற்காக 1,230 ஏக்கர் நிலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது.
அப்போது, இந்த நிலத்திற்கான உரிய இழப்பீடு மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு பணி வழங்கப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடும் வழங்கப்படவில்லை, பணியும் வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து, தேர்வாய் கண்டிகை கிராம மக்கள் புதன் கிழமை டயர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பணி முடிந்த தொழிலாளர்களை, தொழிற்சாலையை விட்டு வெளியே விட மறுத்த போராட்டக்காரர்கள், காலையில் முதல் ஷிப்டுக்கு வேலைக்குச் சென்றவர்களையும் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை.
தொழிற்சாலையின் உள்ளே கட்டுமான பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட மணல் லாரிகளையும் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்து, பொன்னேரி வருவாய் கோட் டாட்சியர் மேனுவல்ராஜ், போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தேர்தல் நேரம் என்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடி யாது என்றும், தேர்தலுக்குப் பிறகு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என, கோட்டாட்சியர் உறுதி அளித்ததை யடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.