சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 800 கிராம் தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து கோட்டுக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த ஆந்திர பயணி கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத் துக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமுடு (45) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது சூட்கேஸ், பையை திறந்து சோதனையிட்டனர். அவற்றில் எதுவும் இல்லை. அதன்பின் அவரது மேல் கோட்டை கழற்றி சோதனை செய்தனர். கோட்டின் உள்பகுதியில் 1 கிலோ 800 கிராம் எடையுள்ள 36 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.55 லட்சம். அந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், “சொந்த வேலையாக துபாய் சென்று வரு கிறேன். அங்குள்ள ஏர்போர்ட் டுக்கு வந்தபோது, ஒருவர் என்னை அணுகி, இந்த கோட்டை சென்னை யில் உள்ள உறவினர் ஒருவரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். மேலும், இது திருமணத்துக்கு அணிய வேண்டியது. சூட்கேசுக் குள் வைக்காதீர்கள், நீங்களே அணிந்து செல்லுங்கள். விமான நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொண்டு, உங்களுக்கு ரூ.5 ஆயிரம் தருவார்கள் என்று கூறி னார். பணத்துக்கு ஆசைப்பட்டு கோட்டை அணிந்து வந்தேன் என ராமுடு தெரிவித்தார். இதுதொடர் பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.