தமிழகம்

திட்ட அனுமதிக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்

செய்திப்பிரிவு

வீட்டு மனைகளுக்கு திட்ட அனுமதி பெறும்போது, மனை உரிமையாளர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட அரசு துறைகளான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகியவை சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன. இதற்கான கட்டணத்தை மனை உரிமையாளர்களிடம் அரசு துறைகள் வசூலிக்கின்றன. எனவே, இதற்கான கட்டணத்தை மாநகராட்சிக்கு அவர்கள் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட் டுள்ளது.

860 சதுர அடிக்கு குறைவாக உள்ள மனைகளில் சாதாரண குடியிருப்பு கட்ட, வளர்ச்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க முடியும் என்று மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது மேயர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT