தமிழகம்

புறநகர் மின்சார ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை மற்றும் திருத்தணி மார்க்கத்தில் இயக்கப்படும் 73 மின்சார ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை இன்று (7-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செங்கல்பட்டு, செங்கல்பட்டு தாம்பரம் மற்றும் திருத்தணி மார்க் கத்தில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மின்சார ரயில்கள் தற்போதுள்ள நேரத்தை விட 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். சில மின்சார ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இன்று முதல் நடைமுறை

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு காலை 9.30-க்கு புறப்படும் மின்சார ரயில் இனி காலை 10.05-க்கு புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05-க்கு புறப்படும் மின்சார ரயில் இனி காலை 8.20-க்கு புறப்பட்டு செல்லும். இந்த புதிய காலஅட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT