பழவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற டச்சுக் கல்லறை திடீரென மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத் துடன் திரும்பிச் செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரி அடுத்த பழவேற்காட்டில் பழமை வாய்ந்த டச்சுக் கல்லறை உள்ளது. தற்போது, கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், நாளுக்கு நாள் பழவேற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாள்களாக இந்தக் கல்லறை பூட்டியே கிடக்கிறது. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கல்லறையை காண முடியாமல், சுற்றுலாப் பயணிகள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல் கின்றனர். எனவே, இக்கல்ல றையை மக்கள் பார்வையிட உட னடியாக திறக்க வேண்டும்என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர் இதுகுறித்து, தொல்லியல் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, அவர்கள் கல்லறை மூடப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.