மெரினா கடற்கரையை குட்டி விமானம் மூலம் படம் பிடித்த சீன இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை வெளிநாட்டு இளைஞர் ஒருவர் கேமராவுடன் கூடிய ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோந்து போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சீனாவைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், குட்டி விமானத்தையும் பறிமுதல் செய்தனர்.
குட்டி விமானத்தில் இருந்த கேமராவை சோதனை செய்த போது, மெரினா கடற்கரை முழுவதையும் அவர் படம் பிடித்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.