அணு தீமை இல்லாத இந்தியாவை பெறுவதற்கான ரயில் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று திருப்பூர் வந்த அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் பஷீர் அகமது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர்கள் பாபு, ஜாபர், முஜீபு உட்பட பலர் பங்கேற்றதுடன், அணு உலைக்கு எதிரான தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போது, இந்தியாவுக்கு அணு உலை தேவை இல்லை என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
அணு தீமை இல்லாத இந்தியாவை பெறுவதற்கான பிரச்சாரத்தை, கடந்த 19-ம் தேதி தொடங்கினார் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார்.
இந்தப் பிரச்சாரம் கன்னியாகுமரியில் தொடங்கி அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகர் வரை நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி பிரச்சாரம் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.