தமிழகம்

ஆலங்குளம் சிமென்ட் ஆலை ரூ.190 கோடியில் விரிவாக்கம்

செய்திப்பிரிவு

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை ரூ.190 கோடியில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பொன்னு பாண்டி, ‘‘சிமென்ட் விலையை குறைக்க வேண்டும், ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கமணி, ‘‘ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு அம்மா சிமென்ட் திட்டத்தை அறிமுகம் செய்து, குறைந்த விலையில் சிமென்ட் விற்பனை செய்து வருகிறது.

இதுவரை 75 ஆயிரம் டன் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டு, 25 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஆலங்குளம் சிமென்ட் ஆலையை ரூ.190 கோடியில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் அங்கு முழு அளவில் சிமென்ட் உற்பத்தி செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT