பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்க, தானியங்கி ஆற்றல் இயந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் போடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
தேனி மாவட்டம், போடி அருகே பி.நாகலாபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (35). ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தற்போது நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் புவிஈர்ப்பு விசையையும், மிதப்பு ஆற்றலையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்குவதற்கு தானியங்கி ஆற்றல் என்ற புதிய இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆய்வில் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், ஆய்வைத் தொடர தொழில்நுட்ப உதவி தேவை என ‘தி இந்து’ உங்கள் குரல் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: மின்சாரமும், எரிபொருளும் இன்றி உலகம் இயங்க முடியாத நிலை உள்ளது. எரிபொருள் தேவைக்காக நாம் கொடுக்கும் விலையும் அதிகம். நிலக்கரி, பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை வளங்களான காற்று, நீர், சூரிய ஒளி என எதையும் பயன்படுத்தாமல் புவி ஈர்ப்பு விசையையும், மிதப்பு ஆற்றலையும் பயன்படுத்தி எளிய முறையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.
ஒரு டர்பைனில் இரும்புக் குண்டை மேலிருந்து கீழே விழச்செய்து, அந்த குண்டை பாதரசம் நிரம்பிய குழாய் மூலம் மீண்டும் மேலே கொண்டு செல்வதன் மூலம், டர்பைன் சூழல ஆரம்பிக்கும். குண்டு கீழே விழுவதையும், பாதரசம் நிரம்பிய குழாய் மூலம் குண்டு மேலே செல்வதையும் சென்சார் மூலம் தொடர்ச்சியாக்கினால் டர்பைன் தொடர்ந்து சூழலும். இதன்மூலம் பினே வீலை(சக்கரம்) சுழல வைத்து டைனமோவை இயக்கவேண்டும். இதன்மூலம் நமக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
இந்த இயந்திரத்தை வாகனங் களுக்கு ஏற்ப வடிவமைத்து பொருத் தினால், கார், லாரி, பஸ், மோட்டார் சைக்கிள் என அனைத்து வா கனங் களையும் எரிபொருள் இ ல்லா மலேயே இயக்க முடி யும். இந்த கண் டுபிடிப்புக்கு 2013-ம் ஆண்டு காப்புரிமை பெற்றேன். இதுவரை இந்த ஆய்வுக்காக ரூ. 7 லட்சம் வரை செலவழித்துள்ளேன். இந்த இயந்திரத்தை செயல் வடிவமாக்க தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது.
இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் தனியாரிடம் உதவி கேட்டும் பலன் இல்லை.
இந்த ஆய்வைத் தொடர சிவகாசி, கோவையில் உள்ள தொழிட்நுட்ப ஆராய்ச்சி மைய ங்கள் அனுமதி வழங்கினால், அங்கு முழுமையாக ஆய்வுசெய்து முடித்து இயந்திரத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன் என்றார்.
இவரது தொலைபேசி எண் 81245 48590.