`தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணைந்து போராட முன் வர வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சி தனியாக போராட்டம் நடத்தும்’ என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய செயலர் சென்னா ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
செய்தியாளர்களிடம் நேற்று மாலை ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கூறியதாவது: `தமிழகத் தில் காங்கிரஸ் கட்சியை பலப் படுத்த மண்டல வாரியாக நிர்வாகி களை சந்தித்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர் கள் அதிகளவில் இணைகின்றனர். இதை எங்களாலேயே நம்ப முடியவில்லை.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக பெற்றிருப்பது வெற்றியே அல்ல. இந்த அளவு பணம் விளை யாடும் என எதிர்பார்க்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிற கும் அத்தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட வில்லை. இந்த வாக்குகளைத் தான் அவர்கள் வெற்றியாக காண் பிக்கின்றனர். தேர்தல் ஆணையத் தின் இந்த செயலைக் கண்டித்து போராட அனைத்து கட்சிகளும் முன் வரவேண்டும். இல்லை யெனில் காங்கிரஸ் கட்சி தனியாக போராட்டம் நடத்தும்.
ஆளுநர் உரையில் முந்தைய உரையில் அறிவிக்கப்பட்டவை அப்படியே இடம்பெற்றுள்ளன’ என்றார் அவர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், தனுஷ்கோடி ஆதித்தன், சட்டப் பேரவை உறுப்பினர் கோபிநாத், மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.டி.எஸ்.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.