கரூர் மாவட்டம், வாங்கல்பாளை யம் பகுதியை சேர்ந்த உதய குமார், மாதுலட்சுமி, ரத்தினம், விஜயகுமார் (37), மனோஜ்ராஜ் (35), ஆதர்ஷ் (6), லாவண்யா (1 ½) ஆகியோர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர்.
இவர்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு நேற்று மதியம் திருச்செந்தூரில் இருந்து கரூருக்குப் புறப்பட்டனர். திண்டுக் கல்-கரூர் 4 வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே விருதலைப் பட்டி எனும் இடத்தில் கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடத்தொடங்கி சாலையோரம் இருந்த தடுப்பு கம்பங்கள் மீது மோதியது. இதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து காரில் பயணம் செய்த மாது லட்சுமி, ரத்தினம் மற்றும் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த மனோஜ்ராஜ், விஜயகுமார், ஆதர்ஷ், லாவண்யா ஆகியோரை ஆம்பு லன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வரும் வழியிலேயே குழந்தை லாவண்யா உயிரிழந்தது. விஜயகுமார், மனோஜ்ராஜ் மற்றும் ஆதர்ஷ் ஆகியோர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.