தமிழகம்

ஆயிரம் கல்லூரிகள் முன்பு 16-ம் தேதி தமாகா உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்: ஜி.கே.வாசன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் ஆயிரம் கல்லூரிகளின் முன்பாக 16-ம் தேதி தமாகா உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்று அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமாகா இளைஞரணி சார் பில் தொடங்கப்பட்ட விழிப் புணர்வு பிரச்சார வாகனம், தமிழகம் முழுவதும் 2,347 கி.மீ. தூரம் பயணித்தது. இதன்மூலம் கிராமம் மற்றும் நகர பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இளைஞரணியைத் தொடர்ந்து மாணவர் அணியையும் வலுப்படுத்த உள்ளோம்.

இதற்காக தமிழகம் முழுவதும் கல்லூரிகளின் முன்பு உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளோம். வரும் 16-ம் தேதி ஆயிரம் கல்லூரிகள் முன்பு இந்த முகாம்கள் நடக்கவுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. கல்லூ ரியை இடம் மாற்றுவது ஏற்புடை யது அல்ல.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கும் நிதியை மத்திய அரசு குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கை - தமிழக மீனவர் களிடைய நடக்கவுள்ள பேச்சு வார்த்தை சுமுக முடிவை எட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

போக்குவரத்து துறை தொழிலாளர்களின் கோரிக் கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண் டும். டெல்லியில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி, 2016 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக வாக் காளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மாநில பிரச்சினைகளுக்கு முக்கியத் துவம் அளிக்கக்கூடிய கட்சி களுக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இவ்வாறு வாசன் கூறினார்.

SCROLL FOR NEXT