தமிழகம்

உறுப்பினர் சேர்க்கைக்கு பைக் பேரணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமாகா உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதியன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமாகா உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இந்த முகாம் இம்மாதம் இறுதி வரை நடக்கவுள்ளது. இளைஞர்கள் மாணவர்கள், மகளிர் என அனைத்து பிரிவினரும் ஆர்வத்துடன் தமாகாவில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் 50 லட்சம் உறுப் பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அடைய கட்சி தொண்டர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைக்க வேண்டும்.

தமாகா உறுப்பினர் சேர்க் கையை வலுப்படுத்த தமிழகத் தில் வரும் 21-ம் தேதி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படவுள்ளது. இந்த பேரணியை தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக அனைத்து கிராமங்களிலும் தமாகாவினர் நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT