ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கையடக்க கணினி (டேப்லெட் பிசி) மூலம் வாக்குப்பதிவு நிலவரத்தை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஏற்பாடு இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் ஆணையத் தால் நடத்தப்படும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்பட்டு வருகிறது. அந்தவகை யில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு நிலவரத்தை கையடக்க கணினி மூலம் பதிவு செய்து உடனுக்குடன் தகவல் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கென 322 வாக்குச் சாவடிகளுக்கும் அந்தந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்ட தலா ஒரு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் வாக்களிக்க வரும்பொழுது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, அஞ்சலக அட்டை உள்ளிட்ட எந்த ஒரு வகையான ஆவணத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கிறார்கள் என்பதையும், வாக்குப்பதிவு சதவீதத்தையும் உடனுக்குடன் கையடக்க கணினி மூலம் பதிவு செய்து, இதற்கென உருவாக் கப்பட்டுள்ள தனி ‘யுஆர்எல்’ வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் ஒவ்வொரு நிமிடமும் தெரிந்துகொள்ளலாம்.
இதுதவிர, இதன் மூலம் ஒவ் வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருப் போர் (க்யூ பொசிஷன்) எண் ணிக்கையையும் அவ்வப்போது அறிந்துகொள்ள முடியும்.