உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் திமுக மக ளிர் அணியினர், மாநில அளவில் மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு, நேற்று காலை கனிமொழி கோவை வந்தார்.
சிங்காநல்லூர் திருச்சி சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள விஜயலட்சுமி டிரஸ்ட் வளாகத்தை (பழைய ஜெயலட்சுமி மில் அமைந்திருந்த இடம்) பார்வையிட்டார். கனிமொழியுடன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தற்போது, மகளிர் தின விழா நடத்த ஆய்வு செய்யப்பட்டிருக் கும் இந்த வளாகம் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை விட்டு வெளி மாவட்டத்தில் திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் முகமாக முதல் கூட்டத்தை இங்கேதான் கூட்டியது திமுக தலைமை.
மகளிர் அணி மாநில செயலாளரான பின்பு, மாநில அளவில் நடக்கும் முதல் மகளிர் நிகழ்ச்சியை, கனிமொழி இங்கே நடத்த உத்தேசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.