தமிழகம்

எழுத்தாளர் புலியூர் முருகேசன் விவகாரம்: திராவிட, கம்யூ. இயக்கங்களுக்கு கொமதேக கண்டனம் - எழுத்தாளருக்கு ஆதரவாக கோவையில் மார்ச் 4-ல் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தமிழர் பண்பாட்டின் வரலாற்றை சிதைக்க முயலும் எழுத்தாளர்களை ஆதரிப்பதாக எழுத்தாளர் முருகேசன் விவகாரத்தில் திராவிட மற்றும் கம்யூ னிஸ்ட் இயக்கங்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கண்டம் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கருத்து சுதந்திரத்துக்கான எல்லையை முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. திருச் செங்கோட்டில் மாதொருபாகன் ஆசிரி யர் பெருமாள்முருகனின் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது. முடித்து வைக்கப்பட்ட இந்த விவகாரத்துக்கு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் திமுகவும் ஊக்கம் கொடுக்கின்றன. இதன் காரண மாக எழுத்தாளர் முருகேசன் கரூரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் பற்றியும் அவர்களது குடும்ப உறவு முறைகளை தவறாக சித்தரித்தும் எழுதியிருக்கிறார்.

குடும்ப உறவுகளை பாதிக்கின்ற வகையில் எழுதியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இப்படி எழுதுவது தமிழர் பண்பாட்டின் வரலாற்றை கேவலமாக நினைக்க வைக்கும் முயற்சி. இது பண்பாட்டை அழிக்க முற்படுகின்றவர்களின் செயல்.

மூன்றாம்தர எழுத்தாளர்களை கொண்டு இப்படி எழுதப்படுவதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கொங்கு நாட்டின் அமைதியைக் கெடுக்க விரும்பும் செயல்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எழுத்தாளர்கள் பெரு மாள்முருகன், முருகேசன் போன்றவர் களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துரிமை கூட்டியக்கம் கண்டனம்

எழுத்தாளர் புலியூர் முருகேசன் தாக்கப்பட்டதற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டியக்கம் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம், அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் விடுதலை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.யு.சி.எல். அமைப்பின் செயலாளரும், கருத்துரிமை பாது காப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப் பாளருமான எஸ்.பாலமுருகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஒரு எழுத்தாளரின் எழுத்தில் உடன்பாடு இல்லை எனும்பட்சத்தில், சட்டத்துக்கு உட்பட்டே எதிர் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதே ஜனநாயக நெறி. மாற்றுக் கருத்து சொல்வதற்கான உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை ஆகும்.

இந்த சூழலில், எழுத்தாளர்கள் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படுவது என்பது தமிழ் இலக்கியத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். கருத்துரிமை மறுப்பு என்பது சமூக வளர்ச்சியில் ஒரு தேக்க நிலையை உருவாக்கும்.

எனவே, பெருமாள்முருகன், துரை குணா முதல் புலியூர் முருகேசன் வரையிலான எழுத்தாளர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி கோவையில் மார்ச் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT