நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தி, தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், தன் பெயரையும் நீலகிரி தொகுதி வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை நீலகிரி தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றம் இன்று ( புதன் கிழமை) மனுவை தள்ளுபடி செய்தது.
நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும் அதிமுக சார்பில் சி.கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.