தமிழகம்

ரூ.3 கோடி மோசடி: சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னையில் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சையத் அலி கான் (36). நிலம் வாங்கி அதில் கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், “தாம்பரத்தை சேர்ந்த குமார்லால் (44), அவரது அண்ணன் விஜய்லால் (46) மற்றும் கோபிநாத் ஆகியோர் தாம்பரம் இரும்புலியூர் விஜய தோட்டம் பகுதியில் உள்ள 5 கிர வுண்ட் நிலத்தை எனக்கு விற் பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, பல்வேறு தவணைகளில் ரூ.3 கோடியை கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனது பெயருக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நட வடிக்கை எடுத்து, என்னு டைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று கூறியிருந் தார். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT