தமிழகம்

சிலிண்டர் விபத்துகளை தடுக்க வீடுதோறும் ஆய்வு செய்யும் பணி: காஸ் கசிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

எஸ்.ரேணுகாதேவி

சமையல் காஸ் கசிவால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்க்க முகவர்கள் மூலம் காஸ் இணைப்பை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

காஸ் அடுப்பை இணைக் கும் ரப்பர் பைப்களை அதிகபட் சமாக 5 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தலாம். ஆனால் சில வீடுகளில் ஒரே பைப்பை பல ஆண்டுகளாக பயன்படுத்து கின்றனர். இதனால் சில நேரங்க ளில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க சிலிண்டர் விநியோகஸ் தர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடுகளுக்குச் சென்று காஸ் இணைப்புகளை சரிபார்க்க வேண்டும் என்று மத் திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் முகவர்கள் மூலம் வீடுகளில் காஸ் இணைப்புகளை சரிபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளன. அப்போது சிலிண்டர்களில் ஏற்படும் கசிவு மற்றும் காஸ் அடுப்பு, பைப் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்கு அரசின் ஆணைப்படி ரூ. 75 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. வீட்டிற்கு வரும் காஸ் இணைப்பு சரிபார்க்கும் ஊழியர்கள் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். மேலும் சமையல் எரிவாயுவால் தீ விபத்து ஏற்படாமல் தவிர்ப்பது குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங் களாக காஸ் இணைப்பை ஆய்வு செய்யும் பணி நடை பெற்று வருகிறது. ''காஸ் இணைப்பு சரிபார்ப்பு பணியின் போது சிலிண்டர் வாங்கியதற்கான பாஸ் புக், டெபாசிட் ரசீது போன்ற வைகளும் சரிபார்க்கப்படும். இதனால் போலி சிலிண்டர் களைப் பயன்படுத்துவது தவிர்க்கப் படும்'' என்று அகில இந்திய எரிவாயு விநியோகஸ் தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

SCROLL FOR NEXT