ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் உதவியாக தமிழகத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் உதவியாக தமிழகத்துக்கு 4 தவணைகளில், மொத்தம் ரூ.2,781.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நான்காவது காலாண்டுக்கான தவணையாக மத்திய அரசிலிருந்து ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி 12-வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான பட்டியல் இனத்தவருக்கான திட்டங்களுக்கும், தேசியத் திட்டங்களுக்கு ரூ.5 கோடியும், மாநிலத் திட்டங்கள் உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு ரூ.395 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.