நிலம் கையகப்படுத்தும் புதிய அவ சர சட்டத்தை திரும்பப் பெறக்கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திட்டக்குழுவுக்கு பதில் புதிய அமைப்பு உருவாக்கப்படுவது குறித்து மக்களிடம் கருத்து கேட் கப்படும் என்றும் சுதந்திரதினத் தன்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், மக்களிடம் கருத்து கேட்காமல், ‘நிதி ஆயோக்’ உருவாக்கியுள்ளார்.
கடந்த காலங்களி்ல் திட்டக்குழு துணையுடன் பல்வேறு திட்டங் களை உருவாக்கி நாட்டில் பல வளர்ச்சி திட்டங்களை அமல் படுத்தியுள்ளனர். நவீன இந்தியா உருவாக்க திட்டக்குழு தான் உதவியது. ‘நிதி ஆயோக்’ எப் படி செயல்படுகிறது என வெளிப் படையாக தெரியவில்லை.
மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்தின்போது, ‘வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு, ஒவ் வொரு இந்தியருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவோம்’ என்று மோடி வாக்குறுதி அளித்தார். தற்போது, ‘தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதற்கு இப்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறி வருகிறார். பாஜக மக்களை நம்பவைத்து எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கடந்த 1894-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த நிலம் கைய கப்படுத்தும் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்தது.
வளர்ச்சிப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களிடம் சம்மதம் பெறவும், சந்தை மதிப்பைவிட 4 மடங்கு கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று புதிய திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளுக்கு சாதகமாக இருந்தவற்றை நீக்கிவிட்டு, அவசர சட்டமாக அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்தும்போது விவசாயி களிடம் முன்அனுமதி பெற வேண்டியதில்லை. எனவே புதிய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சென்னாரெட்டி, தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் காங் கிரஸ் முன்னாள் தலைவர் மயூரா ஜெயக்குமார், ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஈ.பி.ரவி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.