தமிழகம்

‘விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும்’

எஸ்.கோவிந்தராஜ்

தமிழ்நாடு விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி மத்திய பட்ஜெட் குறித்து கூறியதாவது:

விவசாய விளை பொருட் களுக்கு அரசு விலை நிர்ண யம் செய்ய வேண்டும். விவசாயி களிடம் இருந்து அரசே உற்பத்தி பொருட்களையும் கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு இலவசம், மானியம், சலுகை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறி விப்புகளை வெளியிட வேண்டியது இல்லை.

மஞ்சளுக்கு உத்தேச விலை நிர்ணயம் செய்து, அரசே கொள் முதல் செய்து, இருப்பு வைத்து சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய வேண்டும். மஞ்சளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, சந்தைப் படுத்த தொழிற்சாலை வேண்டும்.

சர்வதேச சந்தையில் விலை கிடைக்காத நிலையில், நம் நாட்டில் உள்ள 560 சர்க் கரை ஆலைகளில் சர்க்க ரையை விற்கவும், ஏற்றுமதி செய்யவும் முடியாத நிலை யுள்ளது. அதே நேரம், சர்க்கரை இறக்குமதிக்கு அரசு அனுமதிக் கிறது. இறக்குமதிக்கான தீர் வையை 150 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இறக்குமதியை தடுக்க வேண்டும்.

கணிசமான ஆலைகளில் எத்தனால் எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டும். அதே நேரம் நல்ல விலை மற்றும் சர்க் கரை தேவை ஏற்படும் போது சர்க்கரை உற்பத்தி செய்ய வேண்டும். ஏற்றுமதி தேவைக் காக நீர்நிலைகள், சுற்றுச்சூழல், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கி விட்டு, சுத்தம் செய்ய கோடிக் கணக்கில் பணம் ஒதுக்குவதை மாற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை காடுகள் உருவாக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார்

SCROLL FOR NEXT