தமிழகம்

கஸ்தூரிரங்கன் அறிக்கையை மீறி மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் 2,388 பேருக்கு நிலப் பட்டா: கேரள முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை மீறி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் 2,388 பேருக்கு அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேற்று நிலப்பட்டா வழங்கினார்.

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரிய சின்னமாக அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த மலை யைப் பாதுகாப்பது குறித்து ஆய்வுசெய்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் எந்தவொரு கட்டுமானப் பணி களும் நடைபெறக் கூடாது. அப்பகுதியில் நிலத்தை ஆக்கிர மித்து குடியேறி விவசாயம் செய்து வருவோரை அப்புறப் படுத்த வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமல் படுத்தினால் முல்லை பெரி யாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்ட முடியாது. அதேபோன்று காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பு அணையும் கட்ட முடியாது. அப்போதைய மத்திய அரசு கஸ்தூரிரங்கன் அறிக்கையை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டது.

இந்நிலையில், இந்த அறிக் கையை மீறி இடுக்கி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 1979-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறி விவசாயம் செய்துவரும் அந்த மாநில மக்களுக்கு நிலப் பட்டா வழங்க கேரள அரசு முடிவு செய்தது.

இதையடுத்து நிலப் பட்டா கேட்டு பத்தாயிரத்துக்கும் மேற் பட்டோர் இடுக்கி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப் பித்தனர். மனுவைப் பரிசீலனை செய்து முதற்கட்டமாக 2,388 பேருக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று நிலப் பட்டா வழங்கினார்.

இதற்கான விழா ராஜாக்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் இடுக்கி மாவட்ட எம்பி ஜோயில் ஜார்ஜ், மாவட்ட ஆட்சியர் அஜிஸ்பாட்டீல், இடுமன்சோலை எம்எல்ஏ கே.கே.ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT