தமிழகம்

செவ்வாய் கிரகத்துக்குப் பயணம்: 3 இந்தியர்கள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வு

பிடிஐ

செவ்வாய் கிரகத்துக்கு மனிதனைப் பயணம் செய்ய வைக்கும் தனியார் அமைப்பு ஒன்றின் முயற்சியில், மூன்றாம் சுற்றுக்கு 3 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ளது 'மார்ஸ் ஒன்' அமைப்பு. இந்த அமைப்பு 2024-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப முயற்சி செய்து வருகிறது. முதலில் பூமியில் இருந்து 4 பேரைத் தேர்வு செய்து செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

அந்த 4 பேரைத் தேர்வு செய் வதற்காக கடந்த ஆண்டு விண் ணப்பங்களைக் கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து முதல் சுற்றில் 2,02,586 விண்ணப்பங்கள் பெறப்பட்டன‌.

அவற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு 660 பேர் தேர்வு செய் யப்பட்டனர். அவர்களில் இருந்து மூன்றாம் சுற்றுக்கு 100 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 50 பேரும், பெண்கள் 50 பேரும் உள்ளனர். இவர்களில் 39 அமெரிக்கர்களும், 31 ஐரோப்பியர்களும், 16 ஆசியர் களும், 7 ஆப்பிரிக்கர்களும் மற்றும் 7 ஓஷனியர்களும் அடங்குவர்.

இவர்களில் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் படிக்கும் தரன்ஜீத் சிங் (29), துபாயில் வசிக்கும் ரித்திகா சிங் (29) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா பிரசாத் (19) ஆகிய மூன்று இந்தியர்களும் அடங்குவர்.

இறுதியாகத் தேர்வு செய்யப்படும் நான்கு பேர் ஏழு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு செவ்வாய்க்கு அனுப்பப்படுவார்கள். மெல்ல மெல்ல அங்கு மேலும் 40 பேரை நிரந்தரமாகக் குடியமர்த்தவும் 'மார்ஸ் ஒன்' அமைப்பு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT