தமிழகம்

‘தி இந்து’ - ‘செல்லோ’ பேனா சார்பில் கையெழுத்து போட்டி: சென்னையில் 477 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்; 6 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு

செய்திப்பிரிவு

‘தி இந்து’ பள்ளி பதிப்பு மற்றும் செல்லோ பேனா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கையெழுத்துப் போட்டியில், மாணவ- மாணவியர் ஆறு பேர் சென்னையில் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டி வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

பள்ளி மாணவ- மாணவிகளின் கையெழுத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘தி இந்து’ பள்ளி பதிப்பு மற்றும் செல்லோ பேனா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம், ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் கையெழுத்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டி முகப்பேர், வேலம்மாள் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் நேற்று நடை பெற்றது. இளநிலை (ஜூனியர்), முதுநிலை (சீனியர்) என இரு பிரிவு களில் நடத்தப்பட்ட இப்போட்டி யில், ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 477 பேர் பங்கேற்றனர். இதில், இளநிலைப் பிரிவில், சென்னை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் குலேஷன் பள்ளி மாணவி பி.சிவ ரஞ்சனி முதல் பரிசையும், புதுச்சேரி  சங்கர வித்யாலயா பள்ளி மாணவி வி.எல்.ஆம்லா இரண்டாம் பரிசை யும், எஸ்.ஆர்.எம். மெட்ரிக்குலே ஷன் பள்ளி மாணவி பி.வர்ஷா மூன்றாவது பரிசையும் வென்றனர்.

முதுநிலைப் பிரிவில் முதல் பரிசை டான்பாஸ்கோ பள்ளி மாணவர் ரோகித் சையத், இரண்டாம் பரிசை எம்.சி.சி. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி எஸ்.மீனா, மூன்றாம் பரிசை செயின்ட் ஜான் பள்ளி மாணவி கவுசியா பேகம் ஆகியோர் பெற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஒருவருடைய கையெழுத்தை வைத்தே அவர்க ளுடைய குணாதிசயங்களை கண்டு பிடித்து விடலாம். சிலரது கையெ ழுத்து கண்ணில் ஒத்திக் கொள்ள லாம் போல் இருக்கும். எனவே, கையெழுத்தை மேம்படுத்து வது மாணவர்களுக்கு அவசியமான ஒன்று. போட்டியில் வெற்றி - தோல்வி என்பது சகஜம். ஆனால், வெற்றிக் கான வாய்ப்புகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ‘தி இந்து’ நாளிதழின் விநியோகப் பிரிவு துணை மண்டல மேலாளர் உதய் குமார், செல்லோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் பர்மேந்தர் சிங் பங்கேற்றனர்

SCROLL FOR NEXT