சென்னை போரூரில் வசிப்பவர் செந்தமிழ் அரசு. திரைப்படத் தில் நடிக்க வைப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை இவர் அழைத்து வந்தாராம். பின்னர் அந்த சிறுமியை ராஜேஸ்வரி என்ற இடைத்தரகர் மூலம் பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுத்தியதாகவும், இதற் காக சிறுமியின் தாயாருக்கு ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர், சிபிசிஐடி போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி திரைப்பட இயக்குநர் செந்தமிழ் அரசு, பெண் இடைத்தரகர் ராஜேஸ்வரி, சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.