தமிழகம்

தமிழ் அறிஞர்கள் பாடுபட்டு தொகுத்த இலக்கியங்களை பாதுகாப்பது தமிழர்களின் கடமை: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நம் முன்னோடித் தமிழ் அறிஞர்கள் முயன்று தொகுத்துள்ள இலக்கியப் பொக்கிஷங்களை அழியாமல் காப்பது தமிழர்களின் கடமை என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

‘தமிழ்த் தாத்தா’ டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 161-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், உ.வே.சாமிநாத ஐயர் நூல் நிலையமும் இணைந்து ‘பத்துப் பாட்டு’ பற்றிய பயிலரங்கத்தை நடத்துகின்றன. சென்னை பெசன்ட் நகரில் உள்ள உ.வே.சா. நூலகத் தில் ‘பாடவேறுபாடு நோக்கில் பத்துப்பாட்டு ஓலைச் சுவடிகளும் பதிப்புகளும்’என்ற தலைப்பில் 10 நாட்கள் நடக்கும் பயிலரங்கம் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவுக்குத் தலைமையேற்ற விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:

தமிழ் இலக்கியச் செல்வங் களை ஒவ்வொன்றாகத் தேடித் தேடி தன் வாழ்நாள் முழுக்க சேக ரித்தவர் உ.வே.சா. அவர் தேடிக் கண்டெடுத்த ஓலைச்சுவடிகளும் பல சங்க இலக்கியங்களும்தான் இன்றைக்கு நமக்கு பெருமை சேர்க்கிற இலக்கியங்களாக உள் ளன. தமிழகத்தில் தமிழர்களின் வரலாறு என்பதே எழுதப்படாத தாக உள்ளது. தமிழருக்கு மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. இந்திய நாட்டின், தமிழகத்தின் பல்லாயிரமாண்டுப் பெருமை களை அறிந்துகொள்ள இலக்கிய நூல்களே துணையாக உள்ளன.

இலக்கிய நூல்கள் அதிக அளவில் வரும்போதுதான் அதை யொட்டி இலக்கண நூல்களும் வெளிவர முடியும். நம் முன்னோடித் தமிழ் அறிஞர்கள் முயன்று தொகுத்துள்ள இலக்கி யப் பொக்கிஷங்களை அழியாமல் காப்பது அனைத்துத் தமிழர்களின் கடமையாகும். குடத்தில் இட்ட விளக்காக இருக்கும் தமிழ் இலக் கியங்களும், தமிழர் பெருமையும் குன்றில் இட்ட விளக்காக ஒளிர, தமிழர்கள் முதலில் தமிழின் தொன்மைச் சிறப்பை படித்தறிய வேண்டும். இதற்கு தமிழக அரசு உதவவேண்டும்.

தமிழை யாராலும் முழுமை யாக படித்துவிட முடியாது. இயன்ற வரை படித்து, நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலாக்ஷேத்ரா தலைவரும், முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருமான கோபால்சாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி, தமிழக நிதித்துறை முன்னாள் செயலாளர் சுவாமிநாதன், செம்மொழித் தமி ழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் முத்துவேல், உ.வே.சா. நூல் நிலைய செயலாளர் முனை வர் சத்தியமூர்த்தி, நூலகக் காப்பாளர் முனைவர் உத்தி ராடம் ஆகியோர் கலந்து கொண்டனர். உ.வே.சாமிநாத ஐயர் தொகுத்து இதுவரை அச்சிடப் படாமல் இருந்த ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூலும் விழாவில் வெளியிடப்பட்டது.

SCROLL FOR NEXT