தமிழகம்

தமிழகத்தில் சில நாளில் 100 டிகிரி வெயில்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. மதுரை, திருநெல்வேலியில் நேற்று அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருப்பத்தூரில் 93.92 டிகிரி, சேலத்தில் 93.56 டிகிரி பதிவானது.

தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக வறண்ட வானிலையே நிலவுகிறது. தென் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகபட்ச வெப்பமாக 95 டிகிரி முதல் 97 டிகிரி வரை இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இது 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT