தமிழகம்

வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி

செய்திப்பிரிவு

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, தன்னை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்தை விட 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா மொத்தம் 1,05,328 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்த் மொத்தம் 63,480 வாக்குகள் பெற்றார். வெற்றி வாக்கு வித்தியாசம் 41,848 ஆகும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், 10-வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் என்.ஆனந்த்தை விட 48,815 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி முன்னிலை வகிக்கிறார். வெற்றி வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் எஸ்.வளர்மதி.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. | படிக்க - >நிகழ்நேரப் பதிவு: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் |

SCROLL FOR NEXT