‘புதிய இந்தியாவுக்கேற்ற புதிய சிந்தனைகள்' என்னும் தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கும் குழு விவாதம், சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக, பல்வேறு அறிஞர்களின் பங்களிப்புடன், இந்த விவாதத்தை (நியூ இந்தியா நியூ ஐடியாஸ்) நடத்த ‘தி இந்து’ ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான கருப் பொருளாக, ‘ஒற்றுமைக்கான குரல்’ (குடிமக்களின் விழிப்புணர்வுக் கான அறிஞர்களின் குரல்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி (சமூக ஒற்றுமை), பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் (பொருளாதார ஒற்றுமை), பிரபல பத்திரிகையாளரும், பொருளாதார நிபுணருமான எஸ். குருமூர்த்தி (மத ஒருமைப்பாடு), மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி (அரசியல் ஒற்றுமை), உரையாற்றுவர். ‘தி இந்து’ மூத்த மேலாண் ஆசிரியர் வி.ஜெயந்த் நெறியாள்கை செய் வார்.
இந்நிகழ்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் சனிக்கிழமை (இன்று) மாலை 4 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில், அரசு அதிகாரிகள், சிந்தனையாளர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 500 பேர் பங்கேற்பார்கள். அழைப்பு அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.