தமிழகம்

கருணாநிதி பிரச்சாரம்: திரளாக பங்கேற்க தொ.மு.ச-வினருக்கு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கருணாநிதி பிரச்சாரக் கூட்டங்களில் தொ.மு.ச. உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று தொ.மு.ச. தலைவர் பேரூர் ஆ.நடராசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு நிறைய சலுகைகளை கருணாநிதி வழங்கியுள்ளார். மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கினார். போனஸ் உச்சவரம்பை நீக்கி 20% உயர்த்தி ரூ.8,400 வழங்கினார். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரியங்கள் அமைக்கப்பட்டன. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக மாற்றினார். மே தினத்துக்கு விடுமுறை அளித்ததுடன் மேதினப் பூங்காவை உருவாக்கியுள்ளார்.

இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நடராசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT